குடியரசு தின விழா : ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு.!
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது அவர், 1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம் என ஆளுநர் ரவி பேசினார். ஆளுநரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: “இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்” – அமைச்சர் சேகர்பாபு..
அதனுடன் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக ஆலோசித்து முடிவெடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.