அசாமில் மகாத்மா காந்தி சிலை அகற்றம் - காங்கிரஸ் கண்டனம்!
அசாம் மாநில தின்சுகியா மாவட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை திடீரென அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தின் திப்ருகர் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கூண்டு கட்டுவதற்காக காந்தி சிலையை அகற்றியுள்ளனர். அங்கு பல ஆண்டுகளாக இருந்த 5.5 அடி சிலையை அகழ்வாராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் கிரேன் மூலம் இன்று காலை அகற்றப்பட்டுள்ளது.
இதனையறிந்த அப்பகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ துர்கா பூமிஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த அவர், “தேசத்தந்தை சிலைக்கு பதிலாக மணிக்கூண்டு அமைக்க அனுமதி அளிக்கப்படாது. மணிக்கூண்டை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் தேசத்தந்தை அவர் இருந்த இடத்திலேதான் இருக்க வேண்டும். இந்த செயல் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.
புதிய சிலை கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டாலும், மணிக்கூண்டும், காந்தி சிலையும் ஒரே இடத்தில் இருப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.