For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அசாமில் மகாத்மா காந்தி சிலை அகற்றம் - காங்கிரஸ் கண்டனம்!

09:21 AM Jul 12, 2024 IST | Web Editor
அசாமில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்   காங்கிரஸ் கண்டனம்
Advertisement

அசாம் மாநில தின்சுகியா மாவட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை திடீரென அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தின் திப்ருகர் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கூண்டு கட்டுவதற்காக காந்தி சிலையை அகற்றியுள்ளனர். அங்கு பல ஆண்டுகளாக இருந்த 5.5 அடி சிலையை அகழ்வாராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் கிரேன் மூலம் இன்று காலை அகற்றப்பட்டுள்ளது.

இதனையறிந்த அப்பகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ துர்கா பூமிஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த அவர், “தேசத்தந்தை சிலைக்கு பதிலாக மணிக்கூண்டு அமைக்க அனுமதி அளிக்கப்படாது. மணிக்கூண்டை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் தேசத்தந்தை அவர் இருந்த இடத்திலேதான் இருக்க வேண்டும். இந்த செயல் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அதே இடத்தில் மணிக்கூண்டு அருகில் மகாத்மா காந்தியின் சிலை 6.5 அடி உயரத்தில் அமைக்கப்படும் என அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ ரூபேஷ் கோவாலா உறுதியளித்தார். மேலும், மக்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அந்த இடத்தில் மகாத்மா காந்தியின் புதிய மற்றும் உயரமான சிலை ஆறு மாதங்களுக்குள் கட்டப்படும். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் தலைவருக்கு இது ஒரு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என தெரிவித்தார்.

புதிய சிலை கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டாலும், மணிக்கூண்டும், காந்தி சிலையும் ஒரே இடத்தில் இருப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement