’ஸ்ரீதேவி தான் ரோல்மாடல், தேசிய விருது வாங்க ஆசை’ - நடிகை சிம்ரன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் கதா நாயகியாக நட்டித்துள்ளவர் சிம்ரன். 1997 ஆம் ஆண்டு "ஒன்ஸ் மோர்" மற்றும் "விஐபி" ஆகிய படங்களில் தமிழில் அறிமுகமானார் சிம்ரன். தொடர்ந்து இவர் அஜித், விஜய், சூர்யா,கமல், மாதவன் என முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் குட்பேட் அக்லி, அந்தகன், டூரிஸ்ட் பேமிலி என 3 படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் நடிகை சிம்ரன் இன்று சென்னையில் நடந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் கலந்து கொண்டு பேசினர். அவர் பேசியது,
"கடந்த 30 ஆண்டுகளாக நான் சினிமாவில் இருக்கிறேன். அது மகிழ்ச்சி. ஆனாலும், நடிப்பு, நடனம், உடல் என அனைத்தையும் பராமரிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா? என் வெற்றிக்குபின்னால் நல்ல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என பலர் இருக்கிறார்கள். குட்பேட் அக்லி, அந்தகன், டூரிஸ்ட் பேமிலி என நான் நடித்த 3 படங்கள் வரிசையாக வெற்றி, அதை எண்ணி பார்க்கும்போது நான் லக்கியானவளாக உணர்கிறேன். இந்த கேரக்டர்களை கொடுத்தவர்களுக்கு நன்றி. அதில் அந்தகன் சிமி எனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டர். டூரிஸ்ட் பேமிலி 100வது நாளை கொண்டாடியுள்ளது.
ஹீரோயினாக மட்டுமல்ல, பார்த்தேன் ரசித்தேன். நட்புக்காக, அந்தகனினில் வில்லியாகவும் நடித்து இருக்கிறேன். இந்த மாதிரி கேரக்டரில் இன்னும் நன்றாக நடிக்க முடிகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்துவிட்டு திரிஷா பாராட்டி இருக்கிறார். அவர் திறமையான நடிகை , இப்போதும் விஜய், அஜித், மணிரத்னம் உள்ளிட்டோரின் முன்னணி படங்களில் அற்புதமாக நடித்து வருகிறார். ஜோடி படத்தில்தான் முதலில் என்னுடன் இணைந்து நடித்தார், அவருக்கு நன்றி. டூரிஸ்ட் பேமிலி வெற்றிக்கு குடும்பங்கள் மீதான அன்பு, குடும்ப கட்டமைப்பும் ஒரு காரணம். நான் இப்போது செல்போனில் தான் உலகத்தை தேடி வருகிறோம். குடும்பத்தினருக்கு நேரம் செலவழிப்பு குறைவு. ஶ்ரீ தேவி தான் எனக்கு முன்னுதாரணம் அவருடைய நடிப்பு, உடை அலங்காரம் என அனைத்து விதத்திலும் எனக்கு அவர் முன்னுதாரணம் தான். அதன் பிறகு எனது அம்மா/ தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகர் நடிகைகள் தேவை அது அவசியமாக உள்ளது. நடிகைகள் அதிக ஆண்டு வெற்றிகரமாக வலம்வர நல்ல கதைதான் முக்கியம். ஒரு நடிகருக்கு நல்ல கதாபாத்திரம் முக்கியம் அந்த கதாபாத்திரத்திற்கு 100% உழைப்பை கொடுத்து நடிக்க வேண்டும்
ரஜினி சார் அற்புதமான மனிதர். பேட்ட படத்தில் ரஜினி சாருடன் பணியாற்றியபோது, அவர் நடிக்கும் பொழுது யாரும் கவனிக்காத வகையில் தனியாக அமர்ந்து அவரது நடிப்பை பார்ப்பேன். அவ்வளவு எளிமையாக இருப்பார். ரஜினி சார் மிக பெரிய முன்னுதாரணம் ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய அணுகுமுறை , எளிமை எல்லாமே அற்புதமான ஒன்று. கூலி திரைப்படத்தை பார்க்க அவலாகஇருக்கிறேன். கூலி படத்திற்கு வாழ்த்துக்கள். சென்னையில்தான் நான் கூலி படம் பார்க்கப்போகிறேன். அஜித் இப்போது ரேசில் கவனம் செலுத்துகிறார், விஜய் அரசியலில் ஈடுபடுகிறார். இருவருக்கும் வாழ்த்துகள். இந்த விழாவில் பார்க்கிங் பட இயக்குனருடன் கலந்து கொண்டது மகிழ்ச்சி. அந்த படம் 3 தேசியவிருது வாங்கியதற்கு வாழ்த்துகள். எனக்கும் தேசியவிருது வாங்க ஆசை. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன்’ என்றார்