Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

NDA கூட்டணியின் #RajyaShaba உறுப்பினர்கள் எண்ணிக்கை 115ஆக அதிகரிப்பு!

08:06 AM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பாஜகவுக்கு மட்டும் 96இடங்கள் உள்ளன.

Advertisement

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தலின் முடிவாக தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது

மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமரானார்.

இந்த நிலையில் மக்களவையைப் போல மாநிலங்களவையில் தேசிய ஜனநாயாக கூட்டணி 115 இடங்களை பிடித்துள்ளது. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதன்படி பாஜகவின் சார்பில்  9 பேர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம்  மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி  (அஜித் பவார்) என மொத்தம் 11 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.  இதேபோல ஆளும் கூட்டணிக்கு 6 நியமன உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. காலியாக இருந்த 12 இடங்களில் தெலுங்கானாவில் ஒரு இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது.

தெலங்கானாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணியின் நிதின் பாட்டீலும், பீகாரில் இருந்துஉபதேந்திர குஷ்வாஹாவும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags :
Ajith PawarBJPJDUndaRajya Shaba
Advertisement
Next Article