Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி ராகுல் கஸ்வான்!

04:14 PM Mar 11, 2024 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் - சுரு தொகுதி எம்.பி ராகுல் கஸ்வான்,  பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.  இந்நிலையில்,  போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் இருந்து விலகிய ராஜஸ்தான் - சுரு தொகுதி எம்.பி ராகுல் கஸ்வான், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

"அரசியல் காரணங்களுக்காக,  நான் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.  மக்களவை உறுப்பினராக 10 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சுரு மக்களவை தொகுதியில் 2 முறை எம்.பி. ஆக இருந்த ராகுல் கஸ்வானுக்குப் பதிலாக தேவேந்திர ஜஜாரியா போட்டியிட பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
BJPChuruCongressElection2024lok sabhaMallikarjun KhargempRahul Kaswan
Advertisement
Next Article