"சமூக வலைதளங்களில் பரவிவரும் ராகுல் காந்தியின் வீடியோ தற்போதையதல்ல!" - உண்மை செய்தி சரிபார்க்கும் குழு FACTLY அறிவிப்பு!
This news is factchecked by FACTLY
குஜராத் மாநிலத்தின் பாஜகவின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ராகுல் காந்தியின் வீடியோ தற்போதையதல்ல என உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவான FACTLY உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில் கேரளாவின் வயநாட்டைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ரே பரேலியில் மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு ராகுல் காந்தி சென்றார். இந்நிலையில் குஜராத்தின் பாஜக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 03.02.2024 அன்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், ரே பரேலியில் மனுத்தாக்கல் செய்துவிட்டு ராமரை தொழுதுவிட்டு வரும் ராகுல் காந்திக்கு எதிராக, மோடிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ குறித்து உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவான FACTLY ஆய்வு செய்து வீடியோவின் உண்மை தன்மையை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ குறித்து உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவான FACTLY தெரிவித்துள்ளதாவது:
2024 பிப்ரவரியில் நடந்த இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் போது, ஜார்கண்டின் தியோகாரில் உள்ள பாபா பைத்யநாத் தாமில் ராகுல் காந்திக்கு முன்னால் இந்த மோடி ஆதரவு முழக்கங்கள் எழுந்தன. ராகுல் காந்தி ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த போது மோடி ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்படவில்லை. எனவே, பாஜகவின் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறப்பட்டுள்ள கூற்று தவறானது. இவ்வாறு உண்மை செய்தி சரிபார்க்கும் குழுவான factly இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Note: This story was originally published by ‘factly‘ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective...