For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவால் பரபரப்பு!

01:46 PM May 21, 2024 IST | Web Editor
 நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவால் பரபரப்பு
Advertisement

நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் நேற்று 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இதையடுத்து,  6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும்,  7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில்,  அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி" என தனது தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்ட போது,  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எளிமையை பார்த்து இந்தப்பதிவை போட்டதாகவும், வேறு எதுவும் காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://x.com/SellurKRajuoffl/status/1792806802507375087

Tags :
Advertisement