Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாட்டின் உணர்வுகளை ராகுல் காந்தி புண்படுத்துகிறார்" - #Amitshah குற்றச்சாட்டு!

01:36 PM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் வழக்கமாகி விட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் வழக்கமாகி விட்டது. தேசிய மாநாட்டு கட்சியின் தேச விரோத கொள்கைகளை ஆதரிப்பது, காஷ்மீரில் இட ஒதுக்கீடு குறித்து பிரச்னை எழுப்புவது அல்லது வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பகிர்வது என தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், நாட்டின் உணர்வுகளையும் ராகுல் காந்தி புண்படுத்துகிறார்.

பிராந்தியவாதம், மதம் மற்றும் மொழி அடிப்படையில் நாட்டில் பிளவு ஏற்படுத்தும் காங்கிரஸின் அரசியலை ராகுல் காந்தி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸின் இட ஒதுக்கீட்டு கொள்கையை ராகுல் காந்தி மீண்டும் வெளிக்காட்டி உள்ளார். பாஜக இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது”

இவ்வாறு அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

Tags :
AmitShahBJPCongressINCJKNCNews7TamilRahul gandhi
Advertisement
Next Article