For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஜம்மு-காஷ்மீரில் 2 தேர்தல் பேரணிகள்: #RahulGandhi பங்கேற்கிறார்” - காங்கிரஸ் அறிவிப்பு!

12:43 PM Aug 31, 2024 IST | Web Editor
“ஜம்மு காஷ்மீரில் 2 தேர்தல் பேரணிகள்   rahulgandhi பங்கேற்கிறார்”   காங்கிரஸ் அறிவிப்பு
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் செப்.4-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதல்கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு வாபஸ் பெற நேற்றுடன் (ஆக.30) கடைசி நாள் முடிவடைந்தது. தொடர்ந்து 2ம் கட்ட தேர்தல் செப். 25-ம் தேதி மற்றும் 3ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக். 1-ம் தேதி நடைபெறவுள்ளது. 3 கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக். 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. இந்த சூழலில் தேர்தல் பிரசாரம் ஜம்மு-காஷ்மீரில் சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்து, காங். பொதுச் செயலாளர் குலாம் அகமது மீர், “யூனியன் பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதே கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பம். செப் 4-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் ராகுல் காந்தி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தெற்கு காஷ்மீரின் தூரு அரங்கம் மற்றும் ஜம்முவில் உள்ள சங்கல்டன் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ள 2 தேர்தல் பிரசார பேரணிகளிலும் உரையாற்றுவார்.

எங்கள் அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முதல் கட்ட பிரசாரத்திற்கு மட்டுமே இந்த திட்டம். மற்ற கட்ட தேர்தல்களுக்கு அவர் மீண்டும் ஐம்மு-காஷ்மீர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement