புதுச்சேரி : புதிய கட்சியை தொடங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
புதுச்சேரியில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார். அப்போது நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்யபட்டது.
பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெறும் தொடக்க விழாவில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகளை அறிமுகம் செய்கிறார். இந்த தொடக்க விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். தொடக்க விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட புதுச்சேரி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் மட்டுமல்லாமல் 300க்கும் மேற்பட்ட பௌன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.