For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

07:58 PM Dec 03, 2023 IST | Web Editor
 பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்    முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தல்
Advertisement

 ‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணாமாக பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் இயங்கும்.

அனைத்து பாதுகாப்பு, நிவாரண வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது; புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும். மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags :
Advertisement