மதுரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
திருப்பூர், பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். பின்னர், பல்லடம் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மதுரை சென்றடைந்தார்.
பின்னர் மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் MSME டிஜிட்டல் வர்த்தக கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு பிரதமரை
வரவேற்க தமிழக அரசு சார்பில் தகவல் தொழில் நூட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதமருக்கு வரவேற்பு அளித்தார். இங்கு நடைபெறும் கூட்டத்தில் தேசிய அளவிலான டிஜிட்டல் வர்த்தக கருந்தங்கள் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் மயமாக்கல் செயலாக்க திட்டங்கள் குறித்தான புகைப்படங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர்களை சந்தித்து தொழில் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவ - மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.