For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி - ஜி20 மாநாட்டில் பங்கேற்பு!

11:49 AM Nov 18, 2024 IST | Web Editor
பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி   ஜி20 மாநாட்டில் பங்கேற்பு
Advertisement

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார்.

Advertisement

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு முதலில் சென்றார். கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அந்நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டு அதிபருடன் இருநாட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படியுங்கள் : Srilanka புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து பிரேசிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். பிரேசில் நாட்டில் இன்று மற்றும் நாளை ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் :

"ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தரையிறங்கியுள்ளேன். பல்வேறு உலகத் தலைவர்களோடு உச்சி மாநாட்டின் ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள பேச்சுக்களை எதிர்பார்க்கிறேன்"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கயானாவில் மூன்று நாட்கள் (நவ.19-21) சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்நாட்டு அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று, இந்தப் பயணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்கிறார்.

https://twitter.com/narendramodi/status/1858308652395847762?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1858308652395847762%7Ctwgr%5Eb509d31215b366eb4e298b04306344229d37b7d7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fnews%2Fworld%2Fprime-minister-modi-was-greeted-with-chants-of-vedic-chants-on-his-arrival-in-brazil-1131080
Tags :
Advertisement