“தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்!” - தமிழிசை சவுந்தரராஜன்
பாஜக பொறுத்தவரை தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
நாளைய தினம் நல்ல வெற்றி செய்தி வர வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகோள் வைத்தேன். நாளை பாஜக-விற்கு வெற்றி செய்தி வருவது உறுதி தான். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார். பாஜக பொறுத்தவரை தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். நேர்மையான முறையில் நடந்து முடிந்த தேர்தலை உலகமே வியந்து பார்கிறது. இந்த தேர்தலை பொருத்தவரை எதிர்க்கட்சிகள் தான் வியந்து பார்க்காமல் பயந்து பார்க்கிறார்கள்.
பாஜக வெற்றி பெறுவதை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சியினர் தப்பு சொல்வதற்கு தயாராகி விட்டார்கள். கன்னியாகுமரியில் தியானம் செய்து தமிழகம் ஒரு ஆன்மீக பூமி என்று நிரூபித்துள்ளார் பிரதமர் மோடி. மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ததற்கு எதிர்க்கட்சியினர் நன்றி சொல்லியிருக்க வேண்டும். அரசியல் கழப்புணர்ச்சி எல்லாவற்றையும் நினைத்து கொண்டு தமிழக மக்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இந்த காலகட்டத்திற்கு ஒரு ஆரோக்கியமான அரசியல் வேண்டும். அதற்கு மக்கள் ஒரு வெற்றி தருவார்கள் என நம்புகிறேன். மாநில அரசும் மத்திய அரசும் நட்பாக பழகினால் தான் நல்ல ஒரு திட்டங்களை கொண்டு வர முடியும். அரசியல் சூழ்நிலையில் கருணநிதி நல்ல முடிவுகள் எடுப்பார். அது ஆரோக்கியமாக இருக்கும். கருணாநிதி செய்யும் அரசியலை விட அவர் பேசும் தமிழ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
எதிர்கட்சிகள் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரம் பற்றி பேச மாட்டார்கள். தோற்கும் போது தான் வாக்கு எந்திரம் குறித்து ஏதேனும் ஒரு கேள்வி எழுப்புவார்கள். திமுக வெற்றி பெறும் பொழுது வாக்கு எதிராகங்கள் பற்றி பேசவில்லை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.