For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்று பிறந்தநாள் கொண்டாடும் #NarendraModi | தேநீர் விற்ற சிறுவன் To நாட்டின் பிரதமர்!

08:00 AM Sep 17, 2024 IST | Web Editor
இன்று பிறந்தநாள் கொண்டாடும்  narendramodi   தேநீர் விற்ற சிறுவன் to நாட்டின் பிரதமர்
Advertisement

குஜராத் முதலமைச்சராக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் அவரது அரசியல் பொது வாழ்வு குறித்து பார்க்கலாம்....

Advertisement

நரேந்திர மோடி என்று அனைவராலும் அழைக்கப்படும் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள வட்நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந் மோதி, ஹீராபேன். மொத்தம் உள்ள 6 மகன்களில் 3-வதாக பிறந்த மோடி, சிறுவயதில் இருந்தே வீட்டு வேலைகளில் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர். வட்நகர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, ரயில் நிலையத்தில் உள்ள தனது தந்தையின் டீ கடையில் தேநீர் விற்று வந்தார்.

தனது 8-வது வயதிலேயே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டார் மோடி. இதனிடையே, மோடிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த யசோதா பென் என்ற சிறுமியுடன் திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த மோடி திருமணமான சில நாட்களில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அப்போது அவருக்கு வயது 17. அந்த சமயத்தில் அவர் மேல்நிலைக் கல்வியை முடித்திருந்தார். நரேந்திர மோடிக்கு திருமணமான விஷயம் 2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தான் உலகத்திற்கு தெரியவந்தது. அப்போது இது தொடர்பான சர்ச்சைகள் பரபரப்பாக பேசப்பட்டது.

தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலமாக டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், குஜராத் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். தன்னுடைய 20-வது வயதில் ஆர்எஸ்எஸ்ஸின் தீவிர பற்றாளராக மாறினார். ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து அத்வானி, வாஜ்பாய் ஆரம்பித்த பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

1987-களில் அகமதாபாத்தில் பாஜக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார் மோடி. அத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பின்னர் பாஜகவின் குஜராத் பிரிவுக்கு ஒருங்கிணைப்பு செயலாளராக தேர்வானார் மோடி. 1990-ல் அத்வானியின் ராம ரத யாத்திரை, 1991-92ல் முரளி மனோகர் ஜோஷியின் எக்தா யாத்திரை ஆகியவற்றையும் ஒருங்கிணைக்க உதவினார். 1995-ல் பாஜக தேசிய செயலாளராக தேர்வான மோடி, ஹரியானா மற்றும் இமாச்சலபிரதேச தேர்தல் பிரசாரங்களுக்கு தலைமை வகித்தார். 1996ல் பாஜகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2000-ம் ஆண்டு கேசுபாய் பட்டேல் உடல்நிலை குன்றியதால், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றது. இதையடுத்து பாஜக தேசிய தலைமை பட்டேலுக்கு பதில் மோடியை குஜராத் முதலமைச்சராக நியமித்தது. 2001 அக்டோபர் 7ல் குஜராத் முதலமைச்சராக மோடி பதவியேற்றார். 24 பிப்ரவரி 2002ல் நடந்த இடைத்தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் வெற்றிபெற்றார்.

இதனிடையே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைத்தார். பின்னர் 2007, 2012 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று 4வது முறையாகவும் குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். குஜராத்தில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் நரேந்திர மோடி.

2014-ம் ஆண்டு மே 26-ல் இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என பெயர் பெற்றவரும் இவரே. தற்போது இந்தியாவின் 14வது பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி.

Tags :
Advertisement