“பெண்களை அவமதிக்கும் செயலை பிரதமர் மோடி செய்யமாட்டார்” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
பெண்களை அவமதிக்கும் செயலை பிரதமர் மோடி செய்யமாட்டார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனை ஆதரித்து கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தலைமையில் அவிநாசியில் மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
“உங்களுக்காக என்ன திட்டங்கள் எல்லாம் பாஜக அரசு கொண்டுவந்தது என்ற பெரிய பட்டியலுடன் வந்தேன். அதைச் சொன்னால் ஊடகங்கள் நம்ப மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திட்டம் வந்து சேருமா என்று நினைத்தார்கள். கழிப்பிடம், கான்கிரீட் வீடு என ஏழை மக்களுக்கு பிரதமர் மோடி, தன்னுடைய கட்சி எம்.பி., எம்.எல்.ஏ. இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு, திட்டம் தீட்டி பணம் கொடுத்து உதவியுள்ளோம். மக்கள் ஆதரவு கொடுக்கும் வரை குடும்ப அரசியல் செய்வேன், அது தப்பில்லை என்று மறைமுகமாக முதலமைச்சர் பேசி வருகிறார். நவீன பெண்களை கிராமத்தில் பிரதமர் மோடி மூலம் பார்க்கிறோம். பெண்கள் தன்மானத்தோடு கையில் லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் வகையில் பிரதமர் மோடி திட்டம் வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “இபிஎஸ்-ன் பாதகச் செயல்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்... மன்னிக்கவும் மாட்டார்கள்...” - திமுக கடும் சாடல்!
காய்கறி விற்கும், சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு மானியத்தோடு வட்டி விகிதம் குறைத்து கடன் கொடுக்கப்படுகிறது. மாநில அரசு பெண்களை எப்படி நடத்துகிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என சொல்லி, பின்னர் தகுதி உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று நாடகம் ஆடுகிறது. பிரதமர் மோடி இவ்வாறு செய்யமாட்டார். பெண்களை அவமதிக்கும் செயலை பிரதமர் மோடி செய்யமாட்டார்.”