Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி பேச தகுதி இல்லை” - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

09:47 PM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடி கச்சத்தீவைப் பற்றி பேச தகுதி இல்லை என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவு அரசியல் வட்டாரத்தில் கச்சத்தீவு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் பதிவில் “கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி விட்டுக்கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விசயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் இந்த விசயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதோடு, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது என அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“இந்தியா கூட்டணி கட்சிகள் 300 இடங்களுக்கு மேலே வெற்றிபெற்று ராகுல்காந்தி பிரதமராவார். அருணாச்சலப் பிரதேத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்திய நிலத்தை மீட்க முடியாத மோடி கச்சத்தீவைப் பற்றி பேச தகுதி இல்லை. மக்களவை தேர்தலுக்கு பிறகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் முதலமைச்சர் நாற்காலி பாஜகவினரால் பறிக்கப்படும்” என தெரிவித்தார்.

Tags :
BJPCMO PuducherryCongressElection2024Elections2024Former CMNarayanasamyNews7Tamilnews7TamilUpdatesParlimentary ElectionRangaswamy
Advertisement
Next Article