For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்திய பொருளாதாரம் நன்றாக இருப்பதாக சொல்லும் ஒரே நபர் பிரதமர் மோடிதான்” - ப.சிதம்பரம்!

04:35 PM Mar 09, 2024 IST | Web Editor
“இந்திய பொருளாதாரம் நன்றாக இருப்பதாக சொல்லும் ஒரே நபர் பிரதமர் மோடிதான்”   ப சிதம்பரம்
Advertisement

“இந்திய பொருளாதாரத்தை 2 வரிகளில் சொல்லும் ஒரே நபர் மோடி தான்” என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் செல்வ பெருந்தகை,  ப. சிதம்பரம்,  காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் குழு
தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:

இளைஞர் நாளையொட்டி ராகுல்காந்தி 5 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.  இந்த 5
வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  சுமார் 30 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.  அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.  காங்கிரஸ் கட்சியின் முதல் உத்தரவாதம் 30 லட்சம் காலி இடங்களையும் பூர்த்தி செய்வோம்.

2 வது உத்தரவாதம், அரசு நடத்தும் தேர்வுகளில் வினாத்தாள் கசிவது வழக்கமாகி
விட்டது.  உத்தரபிரதேசத்தில் மட்டும் 2 முறை வினாத்தாள் கசிந்துள்ளது.  காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இதற்கு புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.  வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று
தருவோம். தேர்வு எழுதியவர்களுக்கு இழப்பீடு தரப்படும்.

3வது உத்தரவாதம் தனியார்,  பொதுத்துறை நிறுவனம் எதுவானாலும் பயிற்சியாளர்களை
வைக்க வேண்டும்.  இதனால் ஏராளமான பட்டதாரிகளுக்கு பயிற்சி கிடைக்கும். அதனால்
வேலை எளிமையாக கிடைக்கும்.

4வது உத்தரவாதம் சோமேட்டோ,  ஸ்விக்கி, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் கிடையாது.  எனவே இவர்களுக்கு ஒரு சட்டம் கொண்டுவந்து இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.

5வது உத்தரவாதம் பல இளைஞர்கள் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்க முடியாமல்
தவிர்க்கிறார்கள். அவர்களுக்கு முதலீடு உதவி செய்யப்படும். இந்த 5 உத்தரவாதங்களையும் காங்கிரஸ் செய்யும்.  வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்.  அவர்களிடம் இருந்தே இழப்பீடு பெற்றுக்கூட தேர்வு எழுதியவர்களுக்கு கொடுக்கலாம்.  ஆனால் எப்படி இழப்பீடு கொடுப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

காலி பணியிடங்கள் பூர்த்தி செய்தால் நிதி சுமைதான். ஆனால் வேலை இல்லை என்பதே
பெரிய சுமைதான். தேவையான இடங்களில் பூர்த்தி செய்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  வங்கியின் விதிகளை மாற்ற வேண்டும். யாருக்கு கடன் தர வேண்டும் என்பது பற்றி விதிகளை மாற்ற வேண்டும்.  இன்றைக்கு கல்வி கடன் கிடைப்பது இல்லை. நரிக்குறவர் மகனுக்கு இன்றைக்கு கல்விக்கடன் கிடைப்பதில்லை.

சிலிண்டர் விலை குறைப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் இது போதாது. மீண்டும்
நான் ஆட்சிக்கு வந்தால் குறைத்த 100 ரூபாயை மீண்டும் கூட்ட மாட்டேன் என அவர்
சொல்ல வேண்டும்.  ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் என்றார்கள். 2 கோடி வேலை வாய்ப்புகள் என்றார்கள் செய்தார்களா? ஜிஎஸ்டி  2.0 ஒரு பிழையான சட்டம். பெரிய முதலாளிகள் முதல் சிறிய தொழிலாளிகள் வரை ஜிஎஸ் டி சட்டத்தை மாற்ற சொல்கிறார்கள்.  இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். சட்ட விதிகளில் மாற்றம் செய்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முடியும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மாநில அரசுகளோடு சேர்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும்.

மதுரை எய்ம்ஸ், விலைவாசி உயர்வை பற்றி ஏன் அவர் பேசுவதில்லை என மோடியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும்.  பிப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை 14 நாட்களில் 5 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு பிரதமர் மோடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  இதில் தமிழ்நாட்டுக்கு 17,300 கோடியை அறிவித்துள்ளார்.  இது எல்லாம் பட்ஜெட்டில் ஒரு வரிக்கூட இல்லை.  இதற்கு பணம் ஒதுக்கப்பட்டு உள்ளதா? எனக்கு தெரிந்தவரை இல்லை.  பிரதமரின் அறிவிப்புகள் எல்லாம் காகிதாப் பூ தான்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் ஒழிக்கப்படும்.  மீண்டும் ராணுவத்தில் பழைய வழக்கப்படி தான் ஆட்சேர்ப்பு நடக்கும்.  SBI வங்கி இந்தியாவில் பெரிய வங்கி என பீற்றிக்கொள்கிறது.  SBI வங்கி அரசுக்கு உடந்தையாக ஒரு காரியத்தை செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.  இந்த தேர்தல் பத்திரம் என்பது விடுகதை அல்ல. 21,127 தேர்தல் பத்திரம் தான் விற்கப்பட்டு உள்ளது.  ஒவ்வொரு பாத்திரத்தையும் யார் வாங்கினார்கள் என்பது வங்கிக்கு தெரியும்.  தேர்தலுக்கு முன்பு இந்த செய்திகள் வந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.  உச்ச நீதிமன்றம் இதற்கு நல்ல தீர்ப்பு தரும் என்று நம்புகிறேன்.

SBI மத்திய அரசுக்கு உடந்தையாக செயல்படுகிறது.  ஒவ்வொரு முறையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வின்போது காங்கிரஸ் போராட்டம் நடத்தியுள்ளது.  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் நிதிநிலை அறிக்கையை 2வது முறையாக நேற்று வாசித்தேன்.  அதில் மாநில எவ்வளவு வஞ்சிக்கப்படுகிறது எனபதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  EVM எந்திரத்தில் நம்பிக்கை இழந்த மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  இந்த அவநம்பிக்கையை தேர்தல் ஆணையம் போக்க வேண்டும்.  இந்த அவநம்பிக்கையை போக்க நாங்கள் ஒரு வழி வைத்துள்ளோம். அதை தேர்தல் அறிக்கையில் சொல்கிறோம்.

இந்திய பொருளாதாரத்தை இரண்டு வரிகளில் சொல்லும் ஒரே நபர் மோடி தான். நல்லா
இருக்கிறது என்று சொல்லி முடித்து விடுவார்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Tags :
Advertisement