நைஜீரியாவில் தக்காளி சாஸிற்கு ரிவியூ கொடுத்த கர்ப்பிணி பெண் கைது!
நைஜீரியாவில் தக்காளி சாஸிற்கு ரிவியூ கொடுத்த கர்ப்பிணி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவை சேர்ந்தவர் 39 வயதான சியோமா ஒகோலி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது கற்பமாக இருக்கும் ஒகோலி பேஸ்புக்கில் 18 ஆயிரம் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார். இந்நிலையில், உள்ளூர் நிறுவனம் ஒன்றின் தக்காளி சாஸ் பற்றி ஒகோலி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "நான் நேற்று தக்காளி சாஸ் ஒன்றை வாங்கினேன். சாஸை எப்பொழுதும் சமைப்பதற்காக பயன்படுத்துவேன். ஆனால் கடையில் நான் எப்பொழுதும் வாங்கும் நிறுவனத்தின் சாஸ் இல்லை. அதனால் இதை வாங்கினேன். வீட்டிற்கு வந்ததும் அதனை திறந்து சுவைத்து பார்த்தேன். ஆனால் அதுவெரும் சர்க்கரைதான்! நீங்கள் யாராவது இந்த தக்காளி சாஸை இதற்கு முன்பு பயன்படுத்தியிருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள், என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஒகோலி, “உங்களின் சகோதரரின் தயாரிப்பை மக்கள் வாங்குவதை நிறுத்த எனக்கு உதவுங்கள். நேற்று முதல்முறையாக இதை வாங்கினேன். இது வெறும் சர்க்கரை தான்!” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பின் காவல்துறையால் ஒகோலி கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நிறுவனத்தை பற்றி மக்களிடம் தவறான கருத்துகளை பரப்பிய குற்றச்சாட்டிற்காகவும், நிறுவனத்திற்கு எதிராக மக்களை தூண்டுவதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர் மறுநாள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.