For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

04:42 PM Dec 02, 2023 IST | Web Editor
புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Advertisement

புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள  ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4-ம் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  இந்த நிலையில் புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • • புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக் கூடாது.
  • கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது வெளியே செல்வதை தவிர்க்கவும்.
  • பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும்.
  • இடி, புயலின் போது எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • மின்கம்பங்கள்,  கம்பிகள்,  உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும்
  • விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும், அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும்.
  • வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும்.
  • தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
  • வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.
  • வாகனங்களில் செல்லும் போது குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும்.
  • பாதுகாப்பான  தூரத்தை பராமரிக்கவும்.
  • வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
  • மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
  • பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
  • வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப்    பின்பற்றவும்.
  • சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.

புயல் கால அவசர உதவி எண்கள்:

  • அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100-ஐ அழைக்கவும்.
  • புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி      எண்.100 (அ) 112-ஐ அழைக்கவும்.
  • சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண்.1913-ஐ அழைக்கவும்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண்.101 ஆகியவற்றில் பொதுமக்கள்    தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

Tags :
Advertisement