For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் தான் மத்திய அரசின் சக்தி அதிகரித்துள்ளது - பிரதமர் நரேந்திர மோடி!

06:06 PM Feb 10, 2024 IST | Web Editor
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் தான் மத்திய அரசின் சக்தி அதிகரித்துள்ளது   பிரதமர் நரேந்திர மோடி
Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சியினர் கவலையில் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் தான் மத்திய அரசின் சக்தி அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,

“ஒரு தேசத்திற்கு இரண்டு அரசமைப்பு சட்டங்கள் இருக்கக்கூடாது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான தேவையான சமூக நீதி கிடைத்துள்ளது. அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது கலாசார பெருமைகளின் மரபாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட ஆத்மாக்கள் எங்கிருந்தாலும் நம்மை வாழ்த்தும். முத்தலாக் தடை சட்டமும், மகளிர் இட-ஒதுக்கீடும் இந்த அவையில் தான் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் தடை சட்டம் நீக்கப்பட்டதால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டது. தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழக்க நேரிட்டது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தகவல் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளோம். மத்திய அரசின் அனைத்து முடிவுகளும் பெண்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ளன. தேசத்தில் இளைஞர் சக்தியின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவோம்.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் எதிர்க்கட்சியினர் கவலையில் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் தான் மத்திய அரசின் சக்தி அதிகரித்துள்ளது” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement