பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், 13-ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
இதையும் படியுங்கள்: மிகவும் மோசமான நிலையில் டெல்லி – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!
தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிற்று) போகி பண்டிகை தொடங்கி, ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல்17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, 13-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது. அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.