மாசடைந்த ஆறுகள் தொடர்பான புள்ளி விவரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது உண்மையா? தமிழ்நாடு அரசு விளக்கம்!
நாட்டில் மாசடைந்த 311 ஆறுகளின் பட்டியலில், பிரியாரிட்டி 1ல் உள்ள 4 ஆறுகளும் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்த நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாசடைந்த நிலையில் உள்ள 311 ஆறுகளின் பட்டியலில் பிரியாரிட்டி 1ல் 4 ஆறுகள் இருப்பதாகவும், அந்த 4 ஆறுகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். இது குறித்து மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு, விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் மாசடைந்த நதிகளின் பட்டியலில் மொத்தம் 46 ஆறுகள் பிரியாரிட்டி 1ல் இருப்பதாக உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளதாவது, "மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட இந்தியாவில் மாசடைந்த 311 ஆறுகளின் பட்டியலில், Priority 1ல் உள்ள 4 ஆறுகளும் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
மாசடைந்த ஆறுகள்: அண்ணாமலை சொல்லும் பொய்!@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/xG6hzEAdqU
— TN Fact Check (@tn_factcheck) August 15, 2024
Polluted River Stretches for restoration of water quality 2022 அறிக்கையில், இந்தியாவில் மாசடைந்த நிலையில் உள்ள 311 ஆறுகளின் பட்டியலில் மொத்தம் 46 ஆறுகள் Priority 1ல் உள்ளன. இதில், குஜராத்(6), உத்தரப் பிரதேசம்(6), இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு தலா 4 ஆறுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் Priority 1ல் உள்ள 4 ஆறுகளும் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறுவது பொய்யான தகவல். தவறான தகவலை பரப்பாதீர்" என்று கூறப்பட்டுள்ளது.