டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை என வைரலாகும் கருத்துக்கணிப்பு முடிவுகள் - உண்மையா? | #FactCheck
This News Fact Checked by BOOM
ஏபிபி நியூஸ் மற்றும் நியூஸ் 18 ஆகியவை டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பை வெளியிட்டதாகவும் கருத்துக்கணிப்பின் படி பாஜக 49 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 16 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும் பெறும் என்று கணித்துள்ளதாக சமூல வலைதளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
டெல்லி சட்டசபையின் மொத்தம் உள்ள 70 இடங்களுக்கு 2025 பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், ஏபிபி நியூஸ் மற்றும் நியூஸ் 18 ஆகியவற்றிலிருந்து தலா ஒரு நிமிடம் கொண்ட இரண்டு வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 பற்றிய கருத்துக்கணிப்பு தொடர்பான கிராபிக்ஸ் திரையில் தெரியும். ஏபிபி நியூஸின் புல்லட்டினில், அறிவிப்பாளர் கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, டெல்லி தேர்தலில் பாஜக 49 இடங்களும், ஆம் ஆத்மி கட்சி 16 இடங்களும், காங்கிரஸுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நியூஸ் 18 இன் செய்திக்குறிப்பில், டெல்லியில் பாஜகவுக்கு 46 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 19 இடங்களும், காங்கிரஸுக்கு 5 இடங்களும் கிடைக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வைரல் புல்லட்டின்களும் போலியானவை என்பதை BOOM கண்டறிந்துள்ளது. ஏபிபி நியூஸ் மற்றும் நியூஸ் 18 போன்ற செய்திகள் அல்லது கருத்துக் கணிப்புகள் எதுவும் தாங்கள் நடத்தவில்லை என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. X இன் வெரிஃபைடு பயனரான அஜித் பார்தி, ABP செய்தியின் புல்லட்டினைப் பகிர்ந்து டெல்லி மக்களுக்கு இவ்வளவு சலிப்பு உண்டா அல்லது இந்த கருத்துக்கணிப்பு தீன்தயாள் உபாத்யாய் மார்க்கில் நடத்தப்பட்டதா? என பதிவிட்டிருந்தார்.
இருப்பினும், ஏபிபி நியூஸ் மறுத்ததை அடுத்து, அஜித் தனது பதிவை நீக்கினார். ஃபேஸ்புக்கில் நியூஸ் 18 புல்லட்டினைப் பகிர்ந்த பாஜகவைச் சார்ந்த ஷஹ்தரா இப்படி எழுதினார், 'பிக் பிரேக்கிங்: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 பற்றிய கருத்துக்கணிப்பு. டெல்லியில் தாமரை மலரப்போகிறது. பா.ஜ.கவுக்கு இத்தனை இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஜேபி ஆட்சிக்கு வருகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
உணமை சரிபார்ப்பு :
நியூஸ் 18 மற்றும் ஏபிபி நியூஸின் வைரல் வீடியோக்களைப் பார்த்த பிறகு, இரண்டு புல்லட்டின்களிலும் அறிவிப்பாளர்கள் ஒரே மாதிரியான விஷயங்களைச் சொல்வதைக் கண்டோம். இது தவிர, ஏபிபி நியூஸின் புல்லட்டின் முடிவில் "கேப்கட்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தோம். விசாரணையில், டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸால் உருவாக்கப்பட்ட கேப்கட் ஒரு பிரபலமான வீடியோ எடிட்டிங் செயலி என்பதைக் கண்டறிந்தோம் . ஒருவேளை இந்த செயலியின் உதவியுடன் வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியது.
நியூஸ் 18 செய்தித் தொகுப்பை உன்னிப்பாகப் பார்த்தபோது, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான செய்திகள் கீழே வெளியிடப்பட்டு வருவதைக் கண்டோம், ஆனால் தற்போது தேர்தல் முடிந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியமைத்துள்ளது. அதன் கீழே ஒரு செய்தியில், “ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்” என்று எழுதப்பட்டிருந்தது. ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, கடந்த மாதம் 28ஆம் தேதி முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றதை நாம் அறிவோம் . இதிலிருந்து நியூஸ் 18ன் இந்த புல்லட்டின் திருத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஏபிபி நியூஸ் புல்லட்டின் போலி என்று அதன் அதிகாரப்பூர்வ X கணக்கில் இருந்து இந்த புல்லட்டினுக்கு பதிலளித்த ஏபிபி நியூஸ், இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று கூறியது. அத்தகைய செய்தி/கருத்துக்கணிப்பு எதுவும் abp செய்திகளால் நடத்தப்படவில்லை.
இதேஓல கருத்துக்கணிப்பு தொடர்பான வைரல் புல்லட்டின் தொடர்பாக நியூஸ் 18ஐயும் BOOM தொடர்புகொண்டது. BOOM உடனான உரையாடலில், நியூஸ் 18 இந்தியாவும் இதை மறுத்து, புல்லட்டின் போலி என்று கூறியது.
முடிவு :
ஏபிபி நியூஸ் மற்றும் நியூஸ் 18 ஆகியவை டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பை வெளியிட்டதாகவும் கருத்துக்கணிப்பின் படி பாஜக 49 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 16 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும் பெறும் என்று கணித்துள்ளதாக சமூல வலைதளங்களில் செய்தி பரவியது. விசாரணையின் போது, ABP News அல்லது News 18 அத்தகைய கருத்துக்கணிப்பு எதையும் வெளியிடவில்லை என்று BOOM கண்டறிந்தது. இது தொடர்பாக எக்ஸ் ஆன் ஏபிபி நியூஸ் இந்த புல்லட்டின் போலி என்று ஒரு இடுகையை வெளியிட்டது. நியூஸ் 18 பூம் உடனான உரையாடலின் போது வைரலான கிளிப்பை போலியானது என்றும் கண்டறிந்துள்ளது.
Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.