கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய இரு வழக்கறிஞர்கள் கைது!
கோவையில் தனியார் நிறுவன ஊழியரை கடத்திய வழக்கில் வழக்கறிஞர் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் நிஷாந்த் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நிஷாந்த் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சுல்தானா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுல்தானா அவரது அம்மா வீட்டிற்கு பிரசவத்துக்காக சென்று நிலையில் கடந்த மே 11ஆம் தேதி இரவு வீட்டு வாசலில் நடந்து கொண்டிருந்த நிஷாந்த் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.
இந்நிலையில், 2 நாட்கள் கழித்து நிஷாந்தின் தாய் கலைமணியை அடையாளம் தெரியாத நபர்கள் whatsapp காலில் அழைத்துள்ளனர். பின்னர், மகனை கடத்தி வைத்திருப்பதாகவும் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, கலைமணி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படியுங்கள் : சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!
நிஷாந்தின் தாய் கலைமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் என்பவர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சென்னையைச் சேர்ந்த சர்சாத் நைனா முகமது ஹஜ் யாத்திரையில் இருந்து சென்னை திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் கோவை அழைத்து வந்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.