சென்னை மாநராட்சி அலுவலகம் முன்பு போலீஸ் குவிப்பு!
சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து,ஆகஸ்ட் 1 முதல்சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கீழ்பாக்கம் துணை ஆணையர் ஜெரினா பேகம், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெய்சந்திரன் உள்ளிட்ட 5 துணை ஆணையர்கள் 500 க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் 20 மேற்பட்ட மாநகரப் பேருந்துகள், மூன்று தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், காவல் ரோந்து வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.