For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் அல்லு அர்ஜுன் மீது காவல்நிலையத்தில் புகார் !

04:34 PM Dec 01, 2024 IST | Web Editor
நடிகர் அல்லு அர்ஜுன் மீது காவல்நிலையத்தில் புகார்
Advertisement

தனது ரசிகர்களை army என்று அழைத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது காவல்நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார் .

Advertisement

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின.இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் பாட்னா , சென்னை , கேரளா , மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி நடைப்பெற்ற போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை army என்று அழைத்துள்ளார் , மேலும் பேசியவர் என் ரசிகர்கள் குடும்பத்தை போன்று என்னுடன் நிற்கிறார்கள் , இந்த படம் வெற்றி பெற்றால் என் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின் Green Peace Environment and Water Harvesting Foundation தலைவர் ஸ்ரீனிவாஸ் என்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் army என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணுவதினர் நாட்டை பாதுகாப்பவர்கள் , ரசிகர்களை அழைக்க கூடாது என்று கூறியுள்ளார் . இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது .

Tags :
Advertisement