For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை - குஜராத்தில் நாளை தொடங்கி வைக்கிறார் #PMModi

11:15 AM Sep 15, 2024 IST | Web Editor
முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை   குஜராத்தில் நாளை தொடங்கி வைக்கிறார்  pmmodi
Advertisement

நாட்டிலேயே முதல் வந்தே மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி நாளை குஜராத் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.

Advertisement

வந்தே பாரத் ரயில் சேவையை போல வந்தே மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமா் நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்க உள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு ரயில்வே அதிகாரி பிரதீப் சா்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..

“ குஜராத்துக்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமா் மோடி, அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவையை நாளை தொடங்கிவைக்கிறாா். இந்த புதிய வந்தே மெட்ரோ ரயில் சேவையானது அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் இயங்கும் முற்றிலும் முன்பதிவில்லாத குளிா்சாதன வசதிகொண்ட ரயிலாகும். இதற்கான பயணச்சீட்டை ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக பயணச்சீட்டு மையங்களில் பயணிகள் வாங்கிக்கொள்ளலாம்.

1,150 பயணிகள் அமரும் வசதிகொண்ட இந்த ரயிலில், 2,058 பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கலாம். 9 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ரயில், 360 கி.மீ. தொலைவை 5 மணிநேரம் 45 நிமிஷங்களில் சென்றடையும்.

வந்தே பாரத் ரயில் சேவையை பின்பற்றி வந்தே மெட்ரோ ரயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையில் விபத்துகளை தடுக்கும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன்” என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement