பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் - செல்வப்பெருந்தகை வாழ்த்து!
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:56 AM Jul 25, 2025 IST | Web Editor
Advertisement
பாமக நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸின் 87-ஆவது பிறந்தநாள் இன்று. இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், பாமக நிறுவனருமான மருத்துவர் ராமதாஸுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் பிறந்த நாளில் நலமும் வளமும் சூழ விரும்புகிறேன். நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியம், மக்கள் சேவையில் மென்மேலும் சிறந்து விளங்கிட விழைகிறேன்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.