For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள் - பினராயி விஜயன் கண்டனம்!

08:59 PM Aug 19, 2024 IST | Web Editor
உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள்   பினராயி விஜயன் கண்டனம்
Advertisement

நிலச்சரிவிற்காக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண நிதியிலிருந்து, கடனுக்கான தவணையை கேரள கிராமின் வங்கி பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத் தொகையிலிருந்து, அவர்களின் கடன்தொகை பிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அவசர தேவைக்காக, அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த தொகையிலிருந்து மக்களின் கடன்தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர்,

“நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் வட்டித் தொகையில் தளர்வு அல்லது மாதாந்திர தவணை செலுத்துவதற்கான கால நீட்டிப்பு ஆகியவை தீர்வாக இருக்காது. கடன்களை தள்ளுபடி செய்வதால் வங்கிகள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தாது. கடனைப் பெற்றவர்களில் பலர் இறந்துவிட்டனர். அவர்களது வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்” என்று பினராயி விஜயன் கூறினார்.

இதனை தொடர்ந்து வங்கியின் செயல் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள கேரள கூட்டுறவுத் துறை அமைச்சர் வாசவன், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது;

நாங்கள் தினக்கூலிகளாக இருந்தோம். இப்போது நிலச்சரிவு எங்கள் வீடு, கால்நடைகள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. மாநில அரசு கொடுத்த நிதியில்தான் வாடகைக்கு வீடு பார்க்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த நிதியும் இல்லை என்று கலங்கியபடி கூறியுள்ளனர்.

கிராமின் வங்கியின் பெரும் பங்குகளை (50 சதவீதம்) மத்திய அரசு வைத்துள்ளது. மற்ற பொதுத் துறை வங்கிகள் 35 சதவீதம் வைத்துள்ளன. கேரள அரசு 15 சதவீத பங்குகளை வைத்துள்ளது.அதிகபட்சமாக மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கடன் தவணை இருந்துள்ளது. மாநில அரசின் நிதித்தொகை வந்ததுமே வங்கிகள் அதனை கழித்துவிட்டன. சிலரோ, வீடு கட்டவும், வீட்டை மறுசீரமைப்பு செய்யவும் கடன் வாங்கியிருந்ததாகவும், வீடே தற்போது இல்லாத நிலையில் அதற்கான தவணையாக ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கவலை தெரிவிக்கிறார்கள்.

Tags :
Advertisement