‘அரசன்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
‘வடசென்னை’ படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையாக இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும் ‘அரசன்’ படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளதாக தெரிகிறது.
https://x.com/theVcreations/status/1998607224474898596
இதற்கிடையே, ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. இதில் சிம்பு, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.