For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்" - இபிஎஸ் பேச்சு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
01:28 PM Dec 10, 2025 IST | Web Editor
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
 எம் ஜி ஆர்   ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்    இபிஎஸ் பேச்சு
Advertisement

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் பேசியதாவது,

Advertisement

"திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே நமக்கு தாரக மந்திரம். அன்றைக்கு ஆட்சியில் இருந்தபோதும், இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். இன்றைக்கு எதிர்க்கட்சிகளும், ஏன் திமுகவால் கூட அதிமுக ஆட்சியை குறைசொல்ல முடியவில்லை. பொற்கால ஆட்சியை கொடுத்தோம். அதே ஆட்சி மீண்டும் அமைய நீங்கள் அத்தனை பேரும் உதவ வேண்டும். இங்குள்ளவர்கள் நினைத்தால் நிச்சயம் அது நிறைவேறும். நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெறுவோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags :
Advertisement