For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு கோரி மதுரை ஆட்சியரிடம் மனு!

மதுரை கிரானைட் முறைகேடுகளை பற்றி விசாரித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
04:27 PM May 05, 2025 IST | Web Editor
ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு கோரி மதுரை ஆட்சியரிடம் மனு
Advertisement

சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில்,  “மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் ஊழல் நடைபெற்று உள்ளது. ஊழல் குறித்து அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

Advertisement

இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சகாயத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கிரானைட் முறைகள் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை, தமிழ்நாட்டில் கனிமவள முறைகேடுகள் குறித்து புகார் கொடுப்பவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு பாதுகாப்பு விலகிக் கொண்டது மிகப்பெரிய அநீதியாகும்.  சட்டவிரோத கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்த சகாயத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பது தமிழ்நாடு அரசின் தார்மீக கடமை. ஆகவே, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வாழ்நாள் முழுவதும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து அவரின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement