For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

01:20 PM Jul 21, 2024 IST | Web Editor
 10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிவு
Advertisement

10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து வருவதாக  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) தொடங்குகிறது.

2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சர் வழங்கினார்.
இந்நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (ஜூலை - 23) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளன. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இதையும் படியுங்கள் : சென்னானூர் அகழாய்வு – தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!
“நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் தர வேண்டும்.பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்பது நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் வேண்டும் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்”
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
Tags :
Advertisement