Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் குஜராத் மக்கள்: ஒரே ஆண்டில் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு!

04:06 PM Jul 12, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளில் குடியேறுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

Advertisement

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இரட்டை குடியுரிமை அங்கீகரிக்கப்படுகிறது. அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றிருக்கலாம். ஆனால், இந்தியச் சட்டம் இரட்டை குடியுரிமையை அனுமதிக்கவில்லை. பாஸ்போர்ட் சட்டம் 1967இன் படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று விட்டால், 3 ஆண்டுகளில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். காலதாமதமாக ஒப்படைத்தால் ரூ.10,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

அவ்வாறாக படிப்பு, வேலை உள்ளிட்டவைகளுக்காக நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவர்களில் சிலர் அப்படியே அங்கேயே செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்களில் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்களை ஒப்படைத்தவர்களில் 30-45 வயதான நபர்களே அதிகம் என்றும், கொரோனா காலகட்டத்திற்கு பிறகே குடியுரிமையைத் துறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 485 பேர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கூறி தங்கள் பாஸ்போர்ட்டை இந்திய அரசிடம் ஒப்படைத்துள்ளனர். 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகம். 2022-ல் 241 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டனர். நடப்பு ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 244 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.

2014 – 2022 வரையிலான காலகட்டத்தில் குஜராத்திலிருந்து மட்டும் 22,300 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் டெல்லி (60,414) முதல் இடத்திலும், பஞ்சாப் (28,117) இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கூறுபவர்களில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை பெறுகின்றனர்.

Tags :
citizenshipGujaratIndianNews7Tamilnews7TamilUpdatesPassportSurrender
Advertisement
Next Article