Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது" - அமைச்சர் அதிஷி 

03:11 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி  தெரிவித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,  "மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஆம் ஆத்மி கட்சியைக் குறிவைக்க பாஜக சதி செய்து வருகிறது.  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 நாள்களுக்குள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  அதனால் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாது என்று நினைத்தார்கள்.

கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தபிறகு, கட்சியின் மக்களவை எம்.பி.யான சுவாதி மாலிவாலைப் பயன்படுத்தி குற்றம் சாட்டினார்கள்.  ஆனால் அந்த திட்டமும் பலனளிக்கவில்லை.  பின்னர், கட்சிக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துள்ளதாகப் பழைய பிரச்னையை எழுப்பினார்.  தற்போது ஹரியானா அரசு மூலம்,  டெல்லிக்கு யமுனை நீர் வழங்குவதை பாஜக நிறுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக தண்ணீர் பிரச்னைகள் எழாத பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை குறித்த புகார்கள் வரத்தொடங்கிய நிலையில்,  இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதது.  இதுதொடர்பாக ஹரியானா அரசுக்குக் கடிதம் எழுதுவோம். அவர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவாக அனுப்பப்படும்.

யமுனாவின் நீர்மட்டம் பெரும்பாலும் வஜிராபாத்தில் 674 அடியாகவே உள்ளது.  மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் 671.9 அடியாகவும், மே 16ல் 671.3 அடியாகவும், பின்னர் அடுத்த மூன்று நாள்களில் 671 அடியாகக் குறைந்தது.  ஆம் ஆத்மி அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும்,  தலைநகரில் தண்ணீர் நெருக்கடியை ஏற்படுத்துகிறது பாஜக. வாக்காளர்களைக் கையாளவும் பாஜக செய்யும் தந்திரம் பலிக்காது.  டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது என்பதை பாஜகவிடம் தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி  தெரிவித்துள்ளார்.

Tags :
AAPAtishiBJPDelhiElection2024Elections with News7 tamilElections2024
Advertisement
Next Article