For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அறுவை சிகிச்சை போது வீடியோ கேம் விளையாடிய நோயாளி - இணையத்தில் வைரல்!

12:07 PM Jul 15, 2024 IST | Web Editor
அறுவை சிகிச்சை போது வீடியோ கேம் விளையாடிய நோயாளி    இணையத்தில் வைரல்
Advertisement

அறுவை சிகிச்சை போது நோயாளி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிக்கு அனஸ்தீசியா வழங்கப்பட்டுவது வழக்கம். அனஸ்தீசியா என்பது அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலியைக் குறைக்க மருத்துவர்கள் பயன்படுத்தப்படும்  மருந்து பொருளை குறிக்கிறது. இந்த மருந்துகள் மயக்க மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கு மயக்க மருந்து வழங்கப்படும் நிலையில், தற்போது ஒரு நோயாளி தனது அறுவை சிகிச்சையின் போது வீடியோ கேம் விளையாடியது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது அந்த நோயாளி தனக்கு மயக்க மருந்து வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், தனது சிகிச்சையின் போது தனது மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடினர். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள் : கோபா அமெரிக்க கோப்பை : 16வது முறையாக வென்று சாதனை படைத்த அர்ஜெண்டினா – உடைந்து அழுத மெஸ்ஸியின் படங்கள் வைரல்!

மேலும், அந்த நபர் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு முன், மருத்துவமனையில் ஒரு நோயாளி தனது மூளையில் இருந்து கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்ற போது வயலின் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement