காவலர் வீரவணக்க நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
காவலர் வீரவணக்க நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
11:39 AM Oct 21, 2025 IST | Web Editor
Advertisement
1959ஆம் ஆண்டு அக்.21இல் லடாக் பகுதியில் சீன ராணுவத் தாக்குதலில் மத்திய படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அக்.21 ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த நிலையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகையை முதலமைச்சர் வழங்கினார். காவல்துறையின் தகவல் பதிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கினார்