உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பயணிகள்! வைரலாகும் வீடியோ!
பேருந்தில் பிரேக் பிடிக்காததால் பயணிகள் பேருந்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் அமர்நாத்திலிருந்து பஞ்சாபின் ஹோஷியார்பூர் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, ராம்பன் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 44ல் பானிஹால் அருகே நச்லானாவை அடைந்தபோது பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. உடனே இதுகுறித்து ஓட்டுநர் பயணிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பயந்த பயணிகள் கூச்சலிட்டு, உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக பேருந்தில் இருந்து குதித்துள்ளனர். இதில் 6 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
बड़ी घटना टल गई 🚨
अमरनाथ यात्रियों की बस के ब्रेक अचानक फैल हुए, तीर्थयात्रियों ने जान बचाने के लिए चलती बस से छलांग लगाई। सेना ने बैरियर लगाकर बस को रोका। ये बस अमरनाथ से होशियारपुर (पंजाब) लौट रही थी।#अमरनाथ_यात्रा #AmarnathYatra#AmarnathYatra2024 pic.twitter.com/5rqvj07zqj
— Himalayan Hindu (@himalayanhindu) July 2, 2024
ஓடும் பேருந்தில் இருந்து மக்கள் குதிப்பதை பார்த்த ராணுவத்தினரும், காவல்துறையும் இணைந்து பேருந்தின் டயர்களுக்கு கீழ் கற்களை வைத்து பள்ளத்தாக்கில் இருந்து பேருந்து விழாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.