For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைக்குள் வீசப்பட்ட புகை குப்பிகள் ஆபத்தானதா? - ஓம் பிர்லா விளக்கம்!

11:51 AM Dec 14, 2023 IST | Web Editor
மக்களவைக்குள் வீசப்பட்ட புகை குப்பிகள் ஆபத்தானதா    ஓம் பிர்லா விளக்கம்
Advertisement

நாடாளுமன்றத்துக்குள் வீசப்பட்ட வண்ணப் புகைக் குப்பிகள் நச்சுத்தன்மையற்ற சாதாரணமானவை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள்,  புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கிருந்த எம்.பி-க்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர்.

இதையும் படியுங்கள் : ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக – மு.க.ஸ்டாலின் பேச்சு

இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி போலீஸிடம் ஒப்படைந்தனர். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் நாடாளுமன்றத்துக்குள் வீசப்பட்ட வண்ணப் புகைக் குப்பிகள் நச்சுத்தன்மையற்ற சாதாரண குப்பிகள் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா (டிச.13) புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் இருந்து 5 புகைக் குப்பிகளை ரூ.1,200-க்கு போராட்டக்காரர்கள் வாங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement