For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் - 16பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி.!

09:56 AM Jan 31, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தல்   16பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி
Advertisement

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 16பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளன.  மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

 மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும்  மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  இன்று தொடங்குகிறது.

இதேபோல கர்நாடகா,  ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம்,  பீகார்,  மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத்,  சத்தீஸ்கர், ஹரியானா, மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப். 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்-ன் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேறு யாரும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement