பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்
ஏவிஎம் செட்டியாரின் மூன்றாவது மகன் ஏவிஎம் சரவணன். தனது தந்தைக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவர் 1958ல் இருந்து ஏவிஎம் நிறுவனத்தின் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல படங்களை இவர் தயாரித்துள்ளார். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் ஏவிஎம் சரவணன்.
இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏ.வி.எம் சரவணன், ஒரு மாதத்திற்க முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதங்களாக வசித்து வந்தார். சமீபத்தில் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நல பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86. இன்று மாலை 4 மணி வரை ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. நேற்று அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது