Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பப்பு யாதவ் - பிரியங்கா காந்தி சந்திப்பு!

04:35 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்தார்.

Advertisement

பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பப்பு யாதவ் தேர்தலுக்கு முன்பு தனது ஜன் அதிகார் கட்சியை (ஜேஏபி) காங்கிரஸுடன் இணைத்தார்.

ஆனால் அவருக்கு பூர்னியா தொகுதியை லாலுகட்சி ஒதுக்காததால் அதே தொகுதியில் சுயேட்சையாக பப்புயாதவ் களம் இறங்கினார். ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சந்தோஷ்குமாரை விட பப்புயாதவ் 23 ஆயிரம் 847 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 4-வது முறையாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்த பப்பு யாதவ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“ சிறந்த பேச்சாளரும், தன்னிகரற்ற தலைவருமான காங்கிரஸ் பொதுச் செயலாளருமான மதிப்பிற்குரிய பிரியங்கா காந்தியை நான் சந்தித்தேன். நாடு மற்றும் பீகார் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரே ஒரு தீர்மானம், இந்த முறை 100ஐ தாண்டும், அடுத்த முறை காங்கிரஸ் பெரும்பான்மையை தாண்டும், இந்தியா கூட்டணியின் வலுவான ஆட்சியை நாம் அமைக்க வேண்டும். ஏழை மக்களின் நாயகன் ராகுல் காந்தி பிரதமராக வருவார்”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
BiharCongressElections2024INDIA AllianceLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesPappu Yadavpriyanka gandhiRajesh Ranjan
Advertisement
Next Article