For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா? - #P.Chidambaram கேள்வி!

06:14 PM Oct 20, 2024 IST | Web Editor
ரயில்வே துறையில் உள்ள 2 61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா     p chidambaram கேள்வி
Advertisement

ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர முயற்சிகள் எடுக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரயில்வே துறையில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :

"அரசிதழில் அல்லாத பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 14,63,286 பணியிடங்களில் 2,61,233 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது. இது மொத்தத்தில் 17. 85 சதவீதம் அல்லது 6 -ல் ஒன்று மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.எதற்காக அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்ப 10 ஆண்டுகள் முழுவதும் போதவில்லையா? ஒரு பக்கம் பெரிய வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : RJBalaji நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் டீசர் எப்போது? வெளியான அப்டேட்!

மற்றொரு பக்கம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சரியான கண்காணிப்பின்றி ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. ’குறைவான அரசு, நிறைவான ஆட்சி’ என்பதன் பொருள் இதுதானா? இது வெறுமனே மோசமான மற்றும் திறமையற்ற நிர்வாகமாகும்"

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/PChidambaram_IN/status/1847800816008384527
Tags :
Advertisement