‘OpenAI ஒரு பொய்’ - வைரலாகும் எலான் மஸ்க்கின் X பதிவு!
‘OpenAI ஒரு பொய்’ என எலான் மஸ்க் பதிவிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் வளரச்சி தொழில்நுட்பம் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏஐ-யில் பல வெர்ஷன்களை தொழில் நிறுவனங்கள் வெளியிட்டு சோதனை செய்து வருகின்றனர். அதிலும் OpenAI நிறுவனம் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனுக்கும், டெஸ்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஓபன் ஏஐ உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறான பாதையில் தற்போது பயணிப்பதாக எலான், தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மேலும் சமீபத்தில் சாம் ஆல்ட்மேன் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளார். இந்நிலையில் OpenAI ஒரு பொய் என எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
The new OpenAI logo is really on point pic.twitter.com/CXBqdBer4s
— Elon Musk (@elonmusk) March 12, 2024
"புதிய OpenAI லோகோ உண்மையில் புள்ளியில் உள்ளது" என OpenAI-ன் லோகோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனை உற்றுப்பார்த்தால் LIE எனக் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 12 ஆம் தேதி பதிவிடப்பட்ட இந்த பதிவு இதுவரை 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த பதிவு இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்துகளையும் பெற்றுள்ளது. இதில் பலர் எலான் மஸ்க்கின் பதிவிற்கு எதிர்மறையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.