ஓணம் பண்டிகை - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
கேரள மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாட படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஓணம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
”அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்! இந்த அழகான பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். ஓணம் பண்டிகை கேரள மரபுகளையும் அதன் வளமான கலாச்சாரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த பண்டிகை ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கலாச்சார பெருமையின் சின்னமாகும். இந்த சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நட்பை வளர்க்கவும், இயற்கையுடனான நமது பிணைப்பை வலுப்படுத்தவும் உதவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
”ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் கேரள சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்! இந்த பண்டிகை காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீதி, இரக்கம், பக்தி மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகிய காலத்தால் அழியாத நற்பண்புகளைக் கொண்ட கருணைமிக்க மன்னர் மகாபலியின் வருகையை நாம் கொண்டாடுகிறோம். அவரது ஆசீர்வாதங்கள் ஒவ்வொரு வீட்டையும் அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரப்பட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”என் அன்பான மலையாள சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்! ஓணம் என்பது நமது திராவிட பாரம்பரியத்தை நினைவூட்டும் ஒரு பண்டிகை. நமது வரலாறும் போராட்டங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஓணம் நமது பிணைப்பை வலுப்படுத்தட்டும், ஒவ்வொரு குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும், மேலும் ஒன்றுபட்ட, சமத்துவமான மற்றும் கண்ணியமான சமுதாயத்தை ஒன்றாகக் கட்டியெழுப்ப நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
”திருவோணத் திருநாளை வசந்த கால விழாவாக உவகையுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'ஓணம்' திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு ஓணம் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
பாதாள உலகை ஆட்சி செய்து வரும் மகாபலி சக்கரவர்த்தி, ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளன்று, பூவுலகை காண வருவார் என்பது ஐதீகம். இன்றைய நாளில், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க காத்திருக்கும் கேரள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நாளில் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேற இறைவன் துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மக்களின் நினைவாகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.