For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராகுல்காந்தி குறித்த பேச்சு: காங். எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்!

03:59 PM Jan 09, 2024 IST | Web Editor
ராகுல்காந்தி குறித்த பேச்சு  காங்  எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்
Advertisement

பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகையில் காங். மூத்த தலைவர் ராகுல்காந்தி நிகரான தலைவர் அல்ல என பேசிய கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சி மாநிலத் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Advertisement

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தியை ஒப்பிட முடியாது என கூறியுள்ளார். மேலும்,மோடியை புகழ்ந்து கூறி ராகுல் காந்தியை தாழ்த்தி பேசியதாக சர்ச்சை எழுந்தது. 

இதையும் படியுங்கள் : 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி - யார் இந்த சுசனா சேத்?

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கார்த்தி சிதம்பரம் மீது தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

தொடர்ந்து, நாளை(ஜன.10) காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags :
Advertisement