Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம்" - வானதி சீனிவாசன் பேட்டி!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
01:05 PM Sep 09, 2025 IST | Web Editor
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Advertisement

கோவை, புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisement

அப்போது, "இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது என்பதை தமிழக மக்களும் பாஜக வின் ஒவ்வொரு தொண்டர்களும் நினைக்கிறோம். இன்று நம்முடைய துணை குடியரசு தலைவர் தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின், தமிழகத்தினுடைய கொங்கு மண்டலத்தின் மைந்தன் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் களம் இறங்கி இருக்கிறார். வெற்றி நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் கிடைக்கும் என்பது தெரியும்.

சி.பி.ராதாகிருஷ்ணன் தான் துணை குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார். இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்களும், தொண்டர்களும் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற கோவில்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நலனுக்காகவும், சி.பி.ராதாகிருஷ்ணன் நல்ல முறையில் பதவியேற்று நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவும் அபிஷேகம், அர்ச்சனை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

தமிழ், தமிழர் என பேசிக் கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம், டெல்லியில் துணை ஜனாதிபதி போட்டிக்கு ஒரு தமிழர் போட்டியிடும் போது, தமிழர்களின் முதுகில் குத்துவது போல ஒரு துரோகத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். வரலாறு இதை மன்னிக்கவே மன்னிக்காது.

கூட்டணியில் இருந்து, டி.டி.வி., ஓ.பி.எஸ் போன்றோர் விலகிச் செல்வது குறித்தான கேள்விக்கு, "தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள், இவர்களில் அந்தந்த கட்சிக்கு உள்ளாக சில பிரச்சனைகள் வரும் போது அந்த கட்சியினுடைய தலைமை அதற்கு ஏற்ப முடிவு செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணியை, பலப்படுத்த வேண்டும், நம்முடைய ஒற்றை இலக்கு என்பது 2026ல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது. திமுகவிற்கு எதிராக ஒரு வியூகம் வகுக்கப்பட்டு, அதற்கான செயல் திட்டத்தில் இருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags :
betrayalBJPC. P. RadhakrishnankovaiTamilvanathi srinivasanVOTING
Advertisement
Next Article