“வாரணாசியில் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடும் 36 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு” - வேட்பாளரும், நகைச்சுவை நடிகருமான ஷியாம் ரங்கீலா பதிவு!
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உட்பட 15 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.
இன்று, மாவட்ட ஆட்சியர் என்னிடம் எனது ஆவணங்களில் சிக்கல் இருப்பதாகவும், நான் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்றும் என்னிடம் கூறினார். அவர்கள் என்னுடன் வழக்கறிஞர்களை உள்ளே அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. என்னை தனியாக வரச்சொன்னார்கள். என் நண்பர் தாக்கப்பட்டார். மோடி அழுது நாடகமாடலாம். ஆனால் நான் இங்கு அழ விரும்பவில்லை.
நேற்று 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைப் பார்த்து சிரிப்பதா அழுவதா” என்று பதிவிட்டுள்ளார்.
வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் தரப்பில் ரங்கீலாவின் பதிவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிரமாணப் பத்திரத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் நடைமுறை விதிகளுக்கு இணங்கத் தவறியது ஆகிய காரணங்களுக்காகவே ரங்கீலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளது.